MGR மனைவி கொடுத்த பரிசு.! மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.!

Vijayakanth [file image]

Vijayakanth : முன்னாள் தேமுதிக தலைவரும், மறைந்த முன்னாள் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உயிரோடு இருக்கும் போது செய்த சிறப்புமிக்க காரியங்கள் எல்லாம் இப்போது மட்டும் அல்ல எப்போது நினைத்து பார்த்தாலும் நமக்கு அது புல்லரிக்கும். எந்த அளவுக்கு அவரது செயல்கள் எல்லாமே மென்மையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அவரது மேடைபேச்சும் கம்பீராமாக இருக்கும்.  இந்த பதிப்பில் அது போன்ற ஒரு கம்பீராமான பேச்சை பற்றி தான் பார்க்க போகிறோம்.

Read More :- நம்மளால முடியாது அண்ணா ! விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த அஜித்குமார்?

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலாமச்சரான எம்.ஜி.ஆர் அவர்கள் வைத்திருத்த வாகனத்தில் மிகவும் பிரளமான ஒரு வாகனம் என்றால் அது அவர் அரசியல் பிரச்சாரத்திற்கு எடுத்தும் செல்லும் வாகனம் ஆகும். அந்த வாகனம் எம்.ஜி.ஆருக்கெனவே பிரத்யேகமாக வடிவமைக்க பட்டதாகும். அவருக்கென ஏசியும் (AC), படுக்கை வசதிகளும் அதில் உண்டு. மேலும், அந்த வாகனத்தின் மேல் நடுவில் ஒரு துவாரம் இருக்கும் அதில் நின்று தான் எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்வார். அந்த வாகனத்தின் நம்பர் 2005 ஆகும்.

அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்தவர் தான் நம் விஜயகாந்த். அப்போது இருந்தே அந்த வாகனத்தின் மீது விஜய்காந்த் அவர்களுக்கு ஒரு இணை பிரியாத காதல் இருந்து வந்தது. 1996 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியான ஜானகி அம்மையாருடன் இருந்த நட்பை கொண்டு அந்த வாகனத்தை கேட்டார்.  அவர் வாகனத்தை கேட்ட போது அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Read More :- அந்த நடிகைக்கு கட்டு கட்டா பணம் கொடுத்த விஜயகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

அந்த எதிர்ப்புகளை எல்லாம் தாண்டியும் எம்.ஜி.ஆர் மனைவியான ஜானகி அம்மையார்  சந்தோசமாக அந்த வாகனத்தை விஜயகாந்திடம் பரிசாக ஒப்படைத்தார். அந்த வாகனத்தை பெற்ற விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் அதனை நிப்பாட்டி வைத்தார்.  அதனை தொடர்ந்து 2005-ம் ஆண்டு விஜயகாந்த் அவர்கள் தேமுதிக கட்சியை தொடங்கினார். அந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் அந்த வாகனத்தில் கெத்தாக வந்து இறங்கினார்.

அந்த வாகனத்தில் வந்தது மட்டும் இல்லாமல் தந்து முதல் கட்சி மாநாட்டில் அந்த வாகனத்தை பற்றி உணர்ச்சி வசமாகவும் பேசினார். அந்த வாகனத்தை பற்றி அவர் பேசும் போது, ” 1994-ம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரோட பிரச்சார வாகனம் என் கைக்கு கெடச்சுது அதை மட்டும் மறந்துராதீங்க. யார் யாரோ எப்படி எப்படியோ இருந்த போது எல்லாம் யாருக்கும் கிடைக்கவில்லை.

Read More :- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

ஆனால் மதிற்பிற்குரிய ஜானகி அம்மையார் எனக்கு குடுத்தாங்க. ஆனால் அந்த வாகனத்தை நான் எடுக்கவில்லை அதை எப்போது எடுத்திருக்கேனு எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க 2005-ல எடுத்துருக்கேன். அந்த வாகனத்தின் நம்பர் 2005, 2005-ல எம்.ஜி.ஆர் வாகனம் விஜயகாந்திடம் போக வேண்டும். அந்த வண்டியில் தான் விஜயகாந்த் பிரச்சாரம் போக வேண்டும் என நெத்தியில் எழுந்திருக்கிறது.”, என்று உணர்ச்சிவசமாக மேடை பிரச்சாரத்தில் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்