Vijayakanth : கேப்டன் விஜயகாந்துடன் நடிகை வடிவுக்கரசி அன்பு சண்டைபோட்டுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் அவரை வைத்து படங்களை இயக்க இயக்குனர்களும், படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்களும் விருப்ப படுவது உண்டு. அப்படியான பலருக்கும் விஜயகாந்த் வாய்ப்புகள் கொடுத்து பெரிய ஆளாகவும் ஆக்கி இருக்கிறார். விஜயகாந்தை வைத்து படங்களை தயாரித்ததில் பிரபல நடிகையான வடிவுக்கரசியும் இருக்கிறார்.
விஜயகாந்தை வைத்து வடிவுக்கரசி இந்த படம் எடுக்கப்படுவதற்கு முன்பு வடிவுக்கரசி விஜயகாந்திடம் வாய்ப்பு கேட்கவே தயங்கினாராம். வடிவுக்கரசி விஜயகாந்த் உடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இந்த சமயத்தில் விஜயகாந்த்தை சந்தித்து நான் ஒரு படத்தை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன் என்று கூறினாராம்.
இந்த முடிவுக்கு விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு நல்லது தான் யாரையாவது வைத்து தயாரிங்கள் என்று கூறினாராம். அதற்கு வடிவுக்கரசி படத்தில் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள் என்று விஜயகாந்த் இடம் கேட்டரும். விஜயகாந்த் அதற்கு மைக் மோகன் நல்ல பீக்கில் இருக்கிறார். அவரை வைத்து படம் தயாரிங்கள் கண்டிப்பாக நன்றாக செல்லும் அவரை வைத்து படத்தின் பூஜை போட்டாலே சில இடங்களில் விற்பனையாகி விடும்.
வேண்டுமென்றால் அவரை வைத்து நீங்கள் படம் எடுங்கள் என்று கூறினாராம். இதனை கேட்ட வடிவுக்கரசி நான் ஏற்கனவே மோகனிடம் பேசினேன் அவர் வேறு வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படம் அவரால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதன் பிறகு விஜயகாந்த் வேறு ஒரு நடிகர் பெயரை சொன்னாராம். இதனால் கடுப்பான வடிவுக்கரசி இவ்வளவு நடிகர்கள் பெயரை சொல்கிறீர்கள் நானே உங்களுடைய படத்தின் நடிக்கிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்களா என்று சண்டைபோட்டாராம்.
அதற்கு விஜயகாந்த் நான் படம் தயாரிக்கிறேன் நீங்கள் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நீங்க சொல்லி இருக்கலாமே என்று அன்பு சண்டை போட்டுக் கொண்டார்களாம். அதன் பிறகு தான் கேப்டன் விஜயகாந்த் வடிவுக்கரசி தயாரிப்பில் அன்னை என் தெய்வம் படத்தில் நடித்து கொடுத்தாராம். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய வெற்றியை பெற்றது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…