Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இறந்தும் வாழ்வளிக்கும் வகையில் புல்லரிக்க வைத்த நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரை தினம் தினம் நினைக்கத்தவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லலாம். உயிரோடு இருந்த சமயத்தில் அவர் செய்த உதவிகளை எல்லாம் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அந்த அளவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தது மட்டுமின்றி பசிக்கு சாப்பாடு போட்டும் உதவி செய்து இருக்கிறார்.
எனவே, காலங்கள் அழிந்தாலும் நம்ம கேப்டன் விஜயகாந்த் செய்த உதவிகள் என்றுமே அழியாதவையாக இருக்கும். இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் கூட மற்றவருக்கு வாழ்வளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், விஜயகாந்துடன் ஆரம்ப காலத்தில் இருந்தே கூடவே இருந்த பிரபலம் மீசை ராஜேந்திரன்.
மீசை ராஜேந்திரன் எப்போதுமே வருடம் பிறகும் தினத்தில் எப்போதுமே கேப்டனை சந்தித்து அவரிடம் இருந்து 100 ரூபாய் வாங்குவாராம். ஏனென்றால், அந்த வருடத்தில் 100 ரூபாய் விஜயகாந்திடம் வாங்கினால் தனக்கு ராசியாக இருக்கும் என்பதால் வாங்குவாராம். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் கேப்டன் மறைந்துவிட்டார். எனவே, அவருடைய நினைவிடதிற்கு மீசை ராஜேந்திரன் புத்தாண்டு அன்று சென்றாராம்.
சென்று விஜயகாந்தின் நினைவிடத்தில் 100 ரூபாய்யை வைத்துவிட்டு விஜயகாந்தே தனக்கு கொடுத்தது என்று நினைத்துவிட்டு பையில் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றாராம். வீட்டுக்கு சென்ற பிறகு மீசை ராஜேந்திரனுக்கு ஒரு போன் வந்ததாம். அந்த போனை எடுத்து பேசும்போது உங்களுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து இருக்கிறது அதற்கான அட்வான்ஸ் தொகையை போட்டு விடுகிறேன் என ஒரு தயாரிப்பாளர் கூறினாராம்.
பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த தயாரிப்பாளர் 10 ரூபாய் பணம் போட்டுவிட்டு படத்திற்கு மூன்று நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது கண்டிப்பாக வந்துவிடுங்கள் என்று கூறினாராம். கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் சென்று அந்த 100 ரூபாயை வைத்துவிட்டு எடுத்த நேரத்தில் தான் தனக்கு பட வாய்ப்பு வந்தது எனவும் கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் எனக்கு கோவில் என்றும் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் இறந்தும் வாழ்வளிக்கும் நம்ம கேப்டன் விஜயகாந்த் என கூறி வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…