குளிரில் நடுங்கிய படக்குழு…சரக்கு கேட்ட கேப்டன் விஜயகாந்த்!

Published by
பால முருகன்
Vijayakanth : படக்குழு குளிரில் நடுங்கிய காரணத்தால் கேப்டன் விஜயகாந்த் சரக்கு கேட்டுள்ளார்.

கேப்டன் விஜயகாந்துடன் படங்களில் நடித்த பிரபலங்கள் பலரும் பேட்டிகளில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த அனுபவங்கள் பற்றி பேட்டிகளில் தெரிவிப்பது உண்டு. அந்த வகையில், விஜயகாந்துடன் சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் நடித்த சௌந்தர் அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களுக்காக கேப்டன் விஜயகாந்த் சரக்கு கேட்ட தகவலை கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய சௌந்தர் ” விஜயகாந்த் போல ஒரு வல்லல் மனம் கொண்ட நபரை பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு இருந்தாலும் மறைந்தாலும் கூட இவ்வுலகில் பேசப்படக்கூடிய நபர்களில் அவரும் ஒருவர்.  அவருடன் நான் சேதுபதி ஐபிஎஸ் படத்தில் நடித்திருந்தேன். அப்போது படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் நடந்து கொண்டு இருந்தது.

இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது என்றால் ரொம்பவே குளிரும். எனவே, ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருந்த போது குளிரில் ஆடிக்கொண்டு இருந்தோம். அப்போது கேப்டன் விஜயகாந்த் சார் சீக்கிரம் படப்பிடிப்பை முடிங்க என இயக்குனரிடம் சொன்னார். வேகமாக காட்சிகளையும் இயக்குனர் எடுத்துக்கொண்டு இருந்தார்.

பிறகு ரொம்ப குளிர்ந்த காரணத்தால் சரக்குக்கு ஏற்பாடு செய்யுங்கள் குளிரும் நேரத்தில் நல்லது தான் அவர்களுக்கு குளிர் கொஞ்சம் குறையும் என எங்களுக்காக சரக்கு கேட்டார். பிறகு அவர் சொன்னதால் சரக்கும் வந்தது நாங்கள் குடித்தோம் ஜாலியாக இருந்தோம். அதன் பிறகு தான் அந்த குளிர் எங்களுக்கு தெரியவில்லை.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகள் விஜயகாந்திற்கு தான் சரியாக இருக்கும். அவர் இப்போது இந்த மண்ணில் இல்லை என்று நினைக்கும் போது சற்று வேதனையாக தான் இருக்கிறது” எனவும் நடிகர் சௌந்தர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

6 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

1 hour ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago