குளிரில் நடுங்கிய படக்குழு…சரக்கு கேட்ட கேப்டன் விஜயகாந்த்!
கேப்டன் விஜயகாந்துடன் படங்களில் நடித்த பிரபலங்கள் பலரும் பேட்டிகளில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த அனுபவங்கள் பற்றி பேட்டிகளில் தெரிவிப்பது உண்டு. அந்த வகையில், விஜயகாந்துடன் சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் நடித்த சௌந்தர் அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களுக்காக கேப்டன் விஜயகாந்த் சரக்கு கேட்ட தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய சௌந்தர் ” விஜயகாந்த் போல ஒரு வல்லல் மனம் கொண்ட நபரை பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு இருந்தாலும் மறைந்தாலும் கூட இவ்வுலகில் பேசப்படக்கூடிய நபர்களில் அவரும் ஒருவர். அவருடன் நான் சேதுபதி ஐபிஎஸ் படத்தில் நடித்திருந்தேன். அப்போது படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் நடந்து கொண்டு இருந்தது.
இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது என்றால் ரொம்பவே குளிரும். எனவே, ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருந்த போது குளிரில் ஆடிக்கொண்டு இருந்தோம். அப்போது கேப்டன் விஜயகாந்த் சார் சீக்கிரம் படப்பிடிப்பை முடிங்க என இயக்குனரிடம் சொன்னார். வேகமாக காட்சிகளையும் இயக்குனர் எடுத்துக்கொண்டு இருந்தார்.
பிறகு ரொம்ப குளிர்ந்த காரணத்தால் சரக்குக்கு ஏற்பாடு செய்யுங்கள் குளிரும் நேரத்தில் நல்லது தான் அவர்களுக்கு குளிர் கொஞ்சம் குறையும் என எங்களுக்காக சரக்கு கேட்டார். பிறகு அவர் சொன்னதால் சரக்கும் வந்தது நாங்கள் குடித்தோம் ஜாலியாக இருந்தோம். அதன் பிறகு தான் அந்த குளிர் எங்களுக்கு தெரியவில்லை.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகள் விஜயகாந்திற்கு தான் சரியாக இருக்கும். அவர் இப்போது இந்த மண்ணில் இல்லை என்று நினைக்கும் போது சற்று வேதனையாக தான் இருக்கிறது” எனவும் நடிகர் சௌந்தர் தெரிவித்துள்ளார்.