CaptainMilIerFDFS : 3 வருட தியாகத்தை சமர்பிக்கிறோம்..கேப்டன் மில்லர் குறித்து தனுஷ்!

வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தை ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண்மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
சிவ ராஜ்குமார், நிவேதிதா சதீஷ், விநாயகன், எட்வர்ட் சோனென்ப்ளிக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – நடிகை நயன்தாரா அட்வைஸ்!
இந்த திரைப்படத்திற்கான டிரைலர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
படத்தை பார்த்துவிட்டு மக்கள் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். விமர்சனங்களை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் 3 ஆண்டுகளாக ஒரே கெட்டப்பில் இருந்தது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.
படத்தில் நடிப்பதற்காக தனியாக பயிற்சியும் தனுஷ் எடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில், தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் “எங்கள் 3 வருட வியர்வை, ரத்தம் மற்றும் தியாகத்தை உங்கள் அனைவருக்கும் சமர்பிக்கிறோம்” என கூறியுள்ளார்.