தெறிக்கும் ஆக்சன் காட்சிகள்! ‘கேப்டன் மில்லர்’ டிரைலர் வெளியீடு!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. மிகபெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக இளம் நாயகி ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். நிவேதிதா சதீஷ், சுந்தீப் கிஷன், வினோத் கிஷன், ஜான் கொக்கன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
வெளியானது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லர்!
இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், நாளை வெளியாகும் என நேற்று அதற்கான அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பின் படி தற்போது கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை என அனைத்தும் கேப்டன் மில்லர் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. ட்ரைலரை பார்த்த பலரும் படத்தின் ஆக்சன் காட்சிகள் பயங்கரமாக இருக்கும் போலயே எனவும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.