சர்வதேச விருதுக்கு பரிந்துரையான கேப்டன் மில்லர்!! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!!
கேப்டன் மில்லர்: லண்டனில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் 2024 என்ற பிரிவில் கேப்டன் மில்லர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே தமிழ் சினிமாவில் வெளியான பல பெரிய படங்கள் வசூல் ரீதியாகவும், ரசிகர்களிடையே ஒரு நல்ல படம் என பெயரை எடுக்கவும் தவறியது. அதன் படி குறிப்பிட்டு சொன்னால் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘கேப்டன் மில்லர்’.
இந்த திரைப்படத்துடன் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படமான ‘அயலான்’ திரைப்படமும் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் தியேட்டர்களில் பெரிதளவு கொண்டாடவில்லை. அதிலும் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.
இலங்கையில் நடந்த சில போர் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அதை இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பாக நடந்த கதையாக சித்தரித்து கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். இந்த வெளியான சில நாட்களில் தனுஷ் ரசிகர்கள் கேப்டன் மில்லர் படத்தை கொண்டாட தவறி விட்டதாகவே கூறியும் வந்தனர்.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள 10-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் 2024 என்ற பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை படக்குழுவினர் X தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், கேப்டன் மில்லர் திரைப்படத்தை தவிர வேறு எந்த தமிழ் படமும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த செய்தியை இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
Happy to announce #CaptainMiller has been nominated in the Prestigious National Film Awards , London for the category ” Best Foreign Language Film 2024 ” 🙏❤️@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @dhilipaction @siddnunidop pic.twitter.com/rXlpDOUtRd
— Sathya Jyothi Films (@SathyaJyothi) June 11, 2024