Captain Miller First single [File Image]
நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தினை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது படத்தின் முதல் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ வரும் 22ம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் தனுஷ் இப்பாடலை பாடியுள்ளார். படத்தின் முதல் பாடலை தனுஷ் பாடியுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 90 காலகட்டத்தை பின்னணியாக கொண்ட பீரியாட்டிக் கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
அயலான், லால் சலாம் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களுடன் 2024 பொங்கலுக்கு இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளிநாடு திரையரங்கு உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 38 மொழிகளில்…தமிழ் சினிமாவை மாற்ற போகும்’கங்குவா’ திரைப்படம்!
இதற்கிடையில், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஷ்வரனும் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணையவுள்ளனர் என்றும், இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…
மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம்…
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…