நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், படத்தின் நான்காவது சிங்கிள் பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர்
மேலும், இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதோடு, சுமார் 1,166 இணையதளங்களில் படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக புதுப்படம் வெளியாகிறது என்றால், அதனை திருட்டு தனமாக எடுத்து ரிலீஸ் செய்வது வழக்கம். அதனை தடுக்கும் வகையில், படம் வெளியாவதற்கு படக்குழு இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கும்.
கேப்டன் மில்லர் படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நிவேதிதா சதீஷ், விநாயகன், சுந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நாசர், வினோத் கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…
சென்னை : தவெகவின் புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமனம் செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின்…
சென்னை : 2025ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது, அரசியல்…