எதிர்பார்ப்புடன் வரும் பொங்கல் திரைப்படங்கள் !!

எந்த ஒரு ஆண்டும், ஒரு திரைப்படம் பொங்கல் அன்றே முதலில்  திரைக்கு வரும். அதே  போல இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். ஒரு மிக பெரிய நடிகரின் திரைப்படம்  திரைக்கி வந்தால் அது மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகும். சென்ற வருடம் பொங்கலுக்கு வெளியான வாரிசும், துணிவும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஒரே நாளில் திரைக்கு வந்து மோதி கொண்டது. அதில் வசூலில் இரண்டு படங்களும் சாதனை செய்ததே தவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று கேட்டால் அது கேள்வி குறியே.

போன வருடம் போல இந்த வருடமும் பொங்கலுக்கு மோதி கொள்ளும் படங்கள் வெளியாகிறது. ஆனால் இந்த வருடம் 4 திரைப்படங்கள் வெளியாகிறது. அதில்…

கேப்டன் மில்லர் :

தனுஷ், பிரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் (Captain Miller). சென்ற வாரத்தில் ரிலீஸ் செய்ய பட்ட இப்படத்தின் ட்ரைலர் காட்சிகள்  ரசிகர்களை மிகவும் கவர்ந்து உள்ளது. ஏன் என்றால் இந்த திரைப்படம் ஒரு முழு நீள ஆக்க்ஷன் கதைக்களம் கொண்ட திரைப்படம் என ட்ரைலர் காட்சிகளை பார்க்கும் போதே தெரிகிறது. இதனால் தனுஷின் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் ஒரு திருவிழாவாக இருக்கும் என கருதபடுகிறது.

அயலான் :

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாக உள்ளது அயலான் திரைப்படம். இது ஒரு கற்பனை கலந்த  sci-fi அறிவியல் புனைவு கதையாக வெளியாகிறது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏன் என்றால் அந்த இயக்குனர் இதற்க்கு முன்பு இயக்கிய இன்று நேற்று நாளை திரைப்படத்தின் வெற்றியே. 2016 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திரைப்படம் பல தடைகளை தாண்டி பொங்கல் அன்று வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரைலர் காட்சியில் வரும் ஏலியனின் VFX  காட்சிகள் குழந்தைகளிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

விஜயகாந்த் மகனுடன் நடிக்க தயார்: ராகவா லாரன்ஸ்.!

https://www.dinasuvadu.com/ready-to-act-with-vijayakanths-son-raghava-lawrence/

மெரி கிறிஸ்துமஸ் :

விஜய் சேதுபதி, கத்ரினா கைப் நடிப்பில் ஹிந்தி மொழியிலும், தமிழ் மொழியிலும், ஹிந்தி இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் மெரி கிறிஸ்துமஸ்(Merry Christmas) திரைப்படமும் திரைக்கு வர உள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் இருக்கும் என ட்ரைலரில் தெரிகிறது.

மிஷன் சேப்டர் 1 :

அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் மிஷன் சாப்டர்-1(Mission : chapter 1) திரைப்படம். ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படமும் இந்த பொங்கல் ரேஸில் தைரியமாக களமிறங்குகிறது.

பொங்கலுக்கு எந்த திரைப்படம் ரசிகர்களின் மனதை கவர போகிறது என ஜனவரி 12ஆம் தேதி வரை காத்திருந்தே நாம் பார்க்க வேண்டும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்