Mankatha Re Release : மங்காத்தா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், ஏப்ரல் 20-ஆம் தேதி கூட விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவதை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் மங்காத்தா படத்தை ரீ -ரிலீஸ் செய்யவேண்டும் என்று கேட்டு கொண்டே வந்தார்கள்.
மங்காத்தா படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படம் வெளியாவதாக அறிவித்துவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் படம் ரீ-ரிலீஸ் ஆகவில்லை. எனவே, தமிழ்நாட்டில் இருக்கும் அஜித் ரசிகர்கள் பலரும் இன்னும் வரை அஜித் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என சமூக வலைத்தளங்களில் கேட்டு கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் எக்ஸ் வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் இயக்குனர் வெங்கட் பிரபுவை டேக் செய்து மே 1-ஆம் தேதி மங்காத்தா படத்தை எப்படியாவது ரீ-ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள் என்று கேட்டு இருந்தார். ரசிகரின் அந்த கேள்விக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு ” என்னால் முடிந்தவரை அதற்கான முயற்சிகளை செய்தேன். ஆனால், உரிமை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனத்திடம் இருக்கிறது எனவே அவர்கள் தான் அதற்கான வேலைகளை தொடங்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.
மங்காத்தா படத்தை சன் பிக்சர்ஸ் திரையரங்கு உரிமையைப் பெற்றது மற்றும் ராதிகாவின் ராடான் மீடியாவொர்க்ஸ் மூலம் படத்தை விநியோகம் செய்தது. எனவே, சன் பிக்சர்ஸ் நிறுவனம் நினைத்தால் மட்டும் தான் மங்காத்தா படத்தை தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்ய முடியும். வரும் நாட்களில் அதற்கான முயற்சிகளை எடுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். மேலும் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் தீனா, பில்லா ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…