சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விவாகரத்து முடிவு அறிவித்ததைத் தொடர்ந்து மனைவி ஆர்த்தி தன்னை வீட்டுப் பணியாட்களை விட மோசமாக நடத்தினார் எனவும் குற்றம்சாட்டி ஜெயம் ரவி பேசினார்.
அத்துடன், ஜெயம் ரவி நடித்துச் சம்பாதித்த பணத்தை மனைவி ஆர்த்தி செலவழிப்பதாகவும், ஆனால், நான் ஏதாவது வாங்கினால், நான் ஏன் அதைச் செய்தேன் என்று என்னிடம் சண்டையிடுவாள். ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை வைத்து மூன்று படங்களைத் தயாரித்திருந்தாலும், அதிலிருந்து தனக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
ஜெயம் ரவி கூறிய வேதனை கதையைப் பார்த்த ரசிகர்கள் சந்தோசம் இல்லாத சுப்ரமணியமாவே வாழ்ந்து இருக்கிறார் மனுசன் எனக் கூறி அனைத்து பிரச்சினைகளும் ஒரு நாள் மாறும் எனக் கூறி வருகிறார்கள். இந்த சூழலில், ஜெயம் ரவி இன்னுமே வேதனைப்பட்டு விஷயம் குறித்த ஒரு தகவலும் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது.
அது என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம் ரவி வாட்ஸ்அப் பயன்படுத்திக்கொண்டு இருந்தாராம். அப்போது யார் மெசேஜ் அனுப்பினாலும் முதலில், ஆரத்தி அவருடைய போனை வாங்கி யார் மெசேஜ் செய்திருக்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு அதன் பிறகு, தான் ஜெயம் ரவியிடம் கொடுப்பாராம். வாட்ஸ்அப்பில் மட்டும் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்ட் கூட ஆர்த்தியின் கட்டுப்பாட்டில் தான் இருக்குமாம்.
அடிக்கடி, ஜெயம் ரவி கணக்கிலிருந்து அவருடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகும். அந்த புகைப்படங்களை ஜெயம் ரவி கணக்கிலிருந்து ஆர்த்தி தான் வெளியிடுவாராம். இதனால் பல சமயங்களில் ஜெயம் ரவி கண்கலங்கி அழுதிருக்கிறாராம். எனவே, தன்னை மதிக்காத காரணத்தாலும், தனக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுக்காத காரணத்தாலும் ஜெயம் ரவி இப்படியான முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஜெயம் ரவி தன்னுடைய வேதனை கதையைக் கூறியிருந்த நிலையில், இப்படியான தகவல் வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இன்னும் என்னென்ன, தகவல் எல்லாம் வெளியாக போகிறதோ என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…