நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பயோபிக்கை அதாவது தான் சிறிய வயதில் இருந்து ஒரு 13 வயதிற்குள் இருக்கும் கதையை யாராவது திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசைபட்டாராம். அந்த சமயம் ஒரு இயக்குனர் மீது அவருக்கு நம்பிக்கை வந்து இவர் நம்மளுடைய சிறிய வயது வரலாற்று படத்தை எடுத்தால் நன்றாக எடுப்பார் என நினைத்தாராம். அந்த இயக்குனர் வேறு யாருமில்லை ‘பசங்க’ படத்தை இயக்கிய பாண்டிராஜ் தான்.
இவர் இயக்கிய பசங்க திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. குடும்பங்கள் அனைவரும் ஒன்றாக சென்று இந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தனர் என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தை பார்த்து ரஜினிக்கு மிகவும் பிடித்து போக பாண்டிராஜிற்கு கால் செய்தே ரஜினி பாராட்டினாராம். பிறகு சில நாட்கள் கழித்து ரஜினி தரப்பில் இருந்து பாண்டிராஜிற்கு கால் போனதாம்.
பொதுமேடையில் படுமோசமாக திட்டிய மனோரமா! அனைத்தையும் மறந்து வாய்ப்பு கொடுத்த ரஜினிகாந்த்!
அப்போது ரஜினியின் மகள் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கோவா என்ற படத்தை தயாரித்து வருகிறார். அதைபோல் நீங்கள் ஒரு படம் பண்ணிகொடுக்குறீங்களா? என்று கேட்டுள்ளார்கள். அதற்கு பாண்டிராஜ் சம்மதம் தெரிவித்துள்ளார். பிறகு ரஜினி சாருக்கு அவருடைய பருவ நினைவுகளை கதையாக வைத்திருக்கிறார் அதனை வைத்து ஒரு படம் எடுத்துக்கொடுக்க முடியுமா? என கேட்டுள்ளனர்.
உடனடியா இவ்வளவு பெரிய பட வாய்ப்பு கிடைத்த காரணத்தால் பாண்டிராஜ் நான் இப்போது தான் பள்ளி பருவத்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறேன். எனவே எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் நான் படத்தை பண்ணிகொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். பிறகு அப்படியே இந்த படம் எந்த வித பேச்சுவார்த்தை இல்லாமல் நின்று போக அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம். இந்த தகவலை பாண்டிராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நமக்கு எப்படி செட் ஆகும்? ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்! படமோ சூப்பர் ஹிட்…
மேலும், கண்டிப்பாக ரஜினி அவர் பள்ளி பருவத்தில் நடந்த அனுபவங்கள் மற்றும் சிறிய வயதில் எப்படியெல்லாம் இருந்தோம் என்ற கதையை எழுதி வைத்துள்ள காரணத்தால் கண்டிப்பாக அந்த படம் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. மேலும் ரஜினி கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 170-வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …