கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா..! இந்தியாவின் பிரதிநிதியாக நடிகை குஷ்பு பங்கேற்பு..!

cannes film festival 2023

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக நடிகை குஷ்பு பங்கேற்க உள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழா என்பது பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவாகும். இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் மே மாதம் நடைபெறும். அதே போல, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் 76வது  பதிப்பு வரும் மே 16ம் தேதி முதல் 27 தேதி வரை நடைபெறவுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழா முதன் முதலில் 1946 இல் கலை துறையில் சாதனை படைத்தவர்களை அங்கீகரிப்பதற்காக நடத்தப்பட்டது. இந்த 76-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் மன்றத் தலைவராக ரூபன் ஆஸ்ட்லண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரான்சில் நடைபெறும் 2023ம் ஆண்டிற்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக நடிகை குஷ்பு பங்கேற்கவுள்ளார். இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், அனைவருக்கும் வணக்கம், நான் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நான் பிரான்சிற்கு வந்துள்ளேன். இந்த மதிப்பு மிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரதிநிதியாக கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்