இப்படி செய்யலாமா? இந்த ஜென்மங்களாம் ஏன் உயிரோட இருக்கனும்! தாடி பாலாஜி ஆவேசம்!

Thaadi Balaji

திருத்தணி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் பள்ளி பூட்டுகளில் மனிதக் கழிவுகளை சிலர் பூசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று பலரும் கூறிவருகிறார்கள். அந்த வகையில், நடிகர் தாடி பாலாஜி  இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தாடி பாலாஜி பேசியதாவது ” அரசு பள்ளியில் இப்படி கேவலமான ஒரு விஷயம் நடந்துள்ளது. இப்படி செய்துள்ளவர்கள் என்ன ஜென்மம்? இப்படியான ஜென்மங்களாம் ஏன் உயிரோட இருக்கனும்? என்று எனக்கு புரியவில்லை. நீங்கள் அந்த பள்ளியில் படித்திருக்கலாம் அப்படி இல்லை என்றால் உங்களுடைய குழந்தை  அந்த பள்ளியில் படித்திருக்கலாம்.

குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் இப்படி செய்திருக்கிறீர்களே உங்களுக்கு அறிவு இல்லையா? நீங்கள் மனிதரா இல்லை மிருகமா இப்படி செய்தது எவ்வளவு ஒரு கேவலமான செயல் இப்படி செய்தது மிகவும் தவறான ஒன்று. இப்படி செய்ததால் அங்கு படிக்கும் குழந்தைகளின் படிப்பு கெட்டுப்போகிறது. அரசு பள்ளி என்றால் நன்றாக இருக்கும் என நானே என்னுடைய வாயால் பேசி இருக்கிறேன்.

அரசு பள்ளிகள் நன்றாக இருப்பதை என்னுடைய கண்களால் பார்த்தும் இருக்கிறேன். ஒரே ஒரு விஷயம் மட்டும் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் நம்ம தமிழக முதல்வர் ஒரு குழந்தை சாதித்துவிட்டது என்றால் அந்த குழந்தையை நேரில் அழைத்து பாராட்ட கூடிய நல்ல மனிதர். அப்படி பட்ட நிலைமையில் இப்படி செய்தால் எவ்வளவு பெரிய தவறு.

நான் இதுவரை ஸ்டாலின் சாரிடம் எதுவும் கேட்டது இல்லை முதல் முறையாக என்னுடைய கையை கும்பிட்டு கேட்கிறேன் முதலமைச்சர் ஐயா இந்த சம்பவது நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இந்த மாதிரி குற்றங்கள் இனிமேல் நடக்கவே கூடாது அதற்கு தக்க நடவடிக்கை எடுங்க” என மிகவும் கோபத்துடன் தாடி பாலாஜி பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்