நடிகர் எஸ்.வி.சேகர் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் பேனரால் சுபஸ்ரீ என்ற இளம் வயது பெண் காலமானார். இதனையடுத்து, இந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், பல பிரபலங்கள் இதுகுறித்து தணலது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இளம் பெண் உயிரிழப்பையடுத்து, சென்னை மாநகராட்சி, டிஜிட்டல், பேனர் அச்சகங்களுக்குக் நோட்டீஸ் அனுப்பியது. அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக மாநகராட்சி, கடந்த 19ம் தேதி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி, டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அனுமதியின்றி பேனர் அச்சடித்தால், ஓராண்டு சிறை என்ற சென்னை மாநகராட்சியின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சரியான நடவடிக்கை. முறைப்படுத்துதலுக்கு பதில் ஒரு தொழிலையே முடக்குவது சரியாகாது. யாராவது ஷாக் அடித்து இறந்தால் மின் வாரியத்தை மூடிவிட முடியுமா?’ என பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…