யாராவது ஷாக் அடித்து இறந்தால் மின் வாரியத்தை மூடிவிட முடியுமா? பேனர் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் அதிரடி!

Default Image

நடிகர் எஸ்.வி.சேகர் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக வலம் வருகிறார்.  சமீபத்தில் பேனரால் சுபஸ்ரீ என்ற இளம் வயது பெண் காலமானார். இதனையடுத்து, இந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், பல பிரபலங்கள் இதுகுறித்து தணலது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இளம் பெண் உயிரிழப்பையடுத்து, சென்னை மாநகராட்சி, டிஜிட்டல், பேனர் அச்சகங்களுக்குக் நோட்டீஸ் அனுப்பியது. அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக மாநகராட்சி, கடந்த 19ம் தேதி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி, டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அனுமதியின்றி பேனர் அச்சடித்தால், ஓராண்டு சிறை என்ற சென்னை மாநகராட்சியின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சரியான நடவடிக்கை. முறைப்படுத்துதலுக்கு பதில் ஒரு தொழிலையே முடக்குவது சரியாகாது. யாராவது ஷாக் அடித்து இறந்தால் மின் வாரியத்தை மூடிவிட முடியுமா?’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்