பகத் பாசில் : நடிகர் பகத் பாசில், தனக்கு ADHD குறைபாடு உள்ளதாக தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மலையாள சினிமாவை தாண்டி தமிழ் திரையுலகிலும் ஒரு கலக்கு கலக்கி வரும் பகத் பாசிலின் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஆவேசம்’, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ,150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்திய கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனக்கு ADHD என்ற கவனக் குறைவு இருப்பதாக மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ” இதனை சிறுவயதில் கண்டறிந்தால் எளிதில் குணமாகும் என்று டாக்டர் சொன்னார். 41 வயதில் கண்டறிந்தால் குணப்படுத்த முடியுமா என்று கேட்டேன்” என்றார்.
41 வயதாகும் அவருக்கு, சிறிய வயது முதலே இந்த பிரச்னை இருந்துள்ளது. மூளையில் ஏற்படும் இந்தவகை குறைபாட்டை குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுக்குள் வைக்க முடியும். ADHD-யால் பாதிக்கப்பட்டவர்கள், படிப்பு, வேலை ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியாது. இருப்பினும், பகத் முன்னணி நடிகராக இருப்பது பாராட்டத்தக்கது.
ADHD என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும். இது குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் குறைபாடு ஆகும். கவனச்சிதறல், ஹைபர்-ஆக்டிவ், எளிதில் பதற்றம், உணர்ச்சிவசப்படுதல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும். சராசரியாக குழந்தைகளில் 8.4% பேருக்கும், பெரியவர்களில் 2.5% பேருக்கும் ADHD குறைபாடு இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…