“என்ன கல்யாணின்னு கூப்பிடாத ரோகினினு கூப்பிடு” அம்மாவிற்கே ஆர்டர் போடும் ரோகினி..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[டிசம்பர் 9] எபிசோடில் மனோஜை பாராட்டும் குடும்பம்.. ஆச்சரியப்படும் முத்து..

Rohini (15) (1)

சென்னை :சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[டிசம்பர் 9] எபிசோடில் மனோஜை பாராட்டும் குடும்பம்.. ஆச்சரியப்படும் முத்து..

விஜயாவுக்கு கிடைக்கும் தங்க காப்பு ;

மனோஜ் ரோகினியும் கையில ஸ்வீட்டோட வர்றாங்க ..எங்களுக்கு 10 லட்சம் ப்ராபிட்  கிடைச்சிருக்குனு எல்லார்கிட்டயும் சொல்றாங்க. எல்லாருமே ரெண்டு பேரையும் பாத்து சந்தோஷப்படுறாங்க ..இப்போ விஜயாவிற்கு  தங்க காப்பு வாங்கிட்டு வந்துருக்காங்க .. அத பாத்ததும் விஜயா ரொம்ப சந்தோஷப்படுறாங்க.. இப்ப முத்து கேக்குறாரு அப்பாவுக்கு எதுவுமே வாங்கிட்டு வரலையானு  மனோஜ் வேட்டி சட்டையை கொண்டு போய் கொடுக்கிறாரு .. அண்ணாமலையும் இதெல்லாம் எதுக்குப்பா அப்படின்னு  கேக்குறாங்க. இப்ப மனோஜ் சொல்றாரு ஈசியாறு  பக்கத்துல பீச் ஹவுஸ் ஒன்னு வருது அதையும் வாங்கலாம்னு இருக்கிறேன் அப்படின்னு சொல்ல ..அதுக்கு முத்து சொல்றாரு  லாபம் வந்ததும் வீடு வாங்கலாம்னு நினைக்கிற பாரு சந்தோஷம் தான்டா..ஆனா  அண்ணாமலை பார்த்து செலவு பண்ணுடா அகல கால் வைக்காதே.

இப்போ மீனா மாடியில்  யோசிச்சிட்டு இருக்காங்க.. முத்து வந்து என்னாச்சுன்னு கேட்க உங்க அண்ணன் வீடு வாங்குறது நல்லது தான் ஆனா மாமா  அவர் உயிரோட இருக்கிற வரைக்கும் நம்ம எல்லாரும் கூடவே இருக்கணும்னு நினைக்கிறாரு உங்க அம்மாவும் உங்க அண்ணன பிரிஞ்சு இருக்க மாட்டாங்க அவங்க கூட போயிடுவாங்க.. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் இருந்தா மாமா ரொம்ப வருத்தப்படுவாரு அப்படின்னு சொல்ல உடனே முத்து ஆமா மீனா இத பத்தி நான் யோசிக்கவே இல்ல இரு நான் இப்பவே போயி அவங்க கிட்ட  பேசுறேன் சொல்ல இல்லைங்க அதெல்லாம் வேணாம் நீங்க போய் இதை சொன்னீங்கன்னா பொறாமைப்படுறீங்கன்னு  நினைப்பாங்க .. அதுவும் சரிதான் மீனா.. சரி நடக்கிறது நடக்கட்டும். எது நடந்தாலும் நல்லதுக்குன்னு நினைச்சுக்கோங்க.

muthu,meena (32) (1)

அண்ணாமலையிடம் மாட்ட போகும் ரோகிணி ;

இப்போ காலையில ஆனதும் ரோகிணி மளிகை சாமானோட கிரிஷ பார்க்க போறாங்க ..அம்மா  இந்த வாரத்துக்கு தேவையானதெல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன் . கிருஷ் ஸ்கூல் கிளம்பு நானே உன்னை கொண்டு போய்  விடுகிறேன் .இப்போ  ரோகிணியோட  ஓட அம்மா என்ன கல்யாணி வாரத்துல ரெண்டு நாளாவது வீட்டுக்கு வா அவன்  ரொம்ப ஏங்கி போயிடறான் அப்படின்னு சொல்றாங்க ..முதல்ல என்ன கல்யாணின்னு கூப்பிடுறத நிறுத்து.. ரோகிணினு  கூப்பிடு அப்படின்னு சொல்றாங்க. உடனே அவங்க அம்மா முகம் மாறிடுது.. இது உங்க அப்பா உனக்கு ஆசையா வச்ச பேரு அப்படின்னு சொல்றாங்க.. ரோகிணி அவங்க அம்மாகிட்ட வீடு வாங்க போற விஷயத்தை சொல்றாங்க.. உடனே அவங்க அம்மா சந்தோசம் தான் ..

ஆனா அமௌன்ட் தான் கொஞ்சம் அதிகமா இருக்குற மாதிரி இருக்குன்னு சொல்லுறாங்க  ..இப்ப அனுபவிக்காம எப்பமா அனுபவிக்கிறது வயசான காலத்துல காசு பணம் சேர்த்து வச்சு  அதுக்கப்புறம் அனுபவிக்கிறது வேஸ்ட் தான்.. இப்பவே வாங்கி போட்டு லோன்ல கொஞ்சம் கொஞ்சமா கட்டிடலாம் முதல்ல ஒரு நல்ல விஷயம் சொல்ல வந்தா அது அதுக்கு நீ சந்தோஷப்படு அப்படின்னு சொல்றாங்க .அதுக்காக சொல்லல கல்யாணி உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சு தான் இப்படி பண்ணுனேன் ஆனா தப்பா போகுமே நினைக்கல நல்லது நடந்தா சந்தோஷம்தான் அப்படின்னு சொல்றாங்க. சரி நீ அப்படியே நினைச்சுக்கோ அப்படின்னு க்ரிஷ  கூப்பிட்டு ஸ்கூலுக்கு போறாங்க.. இந்த பக்கம் அண்ணாமலை அதே ஸ்கூலுக்கு வேலைக்கு கிளம்பிட்டு இருக்காரு.. அண்ணாமலை வேலைக்கு போறதில்ல குடும்பத்தில் ஒரு விவாதம் நடக்குது. முத்துக்கு அண்ணாமலை வேலைக்கு போறது பிடிக்கல. நீ போகாதப்பான்னு சொல்றாரு .

மனோஜும் விஜயாவும்  சும்மா தானே இருக்கிறாரு போயிட்டு வரட்டும்னு சொல்றாங்க .மீனா  சொல்லுறாங்க அது அவரோட விருப்பம் அவர் போனா போயிட்டு வரட்டும் வேலை செஞ்சே பழகிட்டாங்க வீட்ல சும்மா இருக்கறதுக்கு ஒரு மாதிரியா தாங்க இருக்கும் . ரவியும் சரிப்பா ஒரு வெக்கேஷன் மாதிரி நீங்க போயிட்டு வாங்க வாரத்துல மூணு நாள் தானே அப்படின்னு சொல்ல கரெக்டுப்பா அப்படின்னு சுருதி சொல்றாங்க. ஆன்ட்டி டான்ஸ் கிளாஸ் வச்சிருக்காங்க இல்ல அது மாதிரி அங்கிளும்  ஏதாவது சின்னதா வேலை செய்யட்டும் அவருக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் இல்ல அப்படின்னு சொல்றாங்க ..இதோட இன்னைக்கு  எபிசோடை முடிச்சு இருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested