வாங்க சமைத்து சாப்பிடலாம்.! சூர்யா ஜோதிகாவுக்காக பிரியாணி செய்த மம்முட்டி.!
நடிகை ஜோதிகா தற்போது மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக ‘காதல் – தி கோர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது, கேரளாவின் எர்ணாகுளத்தில் நடைபெற்று வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஜோதிகாவை பார்ப்பதற்காக சூர்யா வந்துள்ளாராம். பிறகு படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் கழித்துவிட்டு மம்மூட்டியுடன் மனம் விட்டு சூர்யா பேசியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- கோடிக்கணக்கில் செலவு வைத்த வைகைப்புயல் வடிவேலு.! செம கடுப்பில் தயாரிப்பு நிறுவனம்.!
பிறகு மம்மூட்டி தனது கையால் ஆசையுடன் பிரியாணி செய்து சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் விருந்து வைத்துள்ளார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்குப் பிரியாணி சமைத்துக்கொடுத்த நடிகர் மம்மூட்டி.#Mammootty | #Suriya | #Jyotika | #KaathalTheCore pic.twitter.com/fiVSGfLu7G
— CineBloopers???? (@CineBloopers) November 11, 2022