tamanna raashi khanna [file image]
அரண்மனை 5 : அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்து இருக்கும் நிலையில், அடுத்ததாக ஐந்தாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் அதிலும் கவர்ச்சி பாடல் கண்டிப்பாக இருக்கும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் ராஷி கண்ணா, தமன்னா, சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு, தேவ நந்தா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த மே 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அரண்மனை 4’. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆனது.
வசூல் ரீதியாக மட்டும் படம் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது. திரையரங்குகளை தொடர்ந்து அடுத்ததாக படம் வரும் ஜூன் 21-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில், அரண்மனை 4 படத்தில் கடைசியாக இடம்பெற்ற கவர்ச்சி பாடல் படத்தின் விளம்பரத்திற்கு பெரிய அளவில் உதவியது என்றே சொல்லலாம்.
அதைப்போலவே, அரண்மனை 5 படத்திலும் பாடல் இருக்கும் என இயக்குனர் சுந்தர் சி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னிடம் பெய் படத்தில் எதற்கு கவர்ச்சி பாடல் என்று பலரும் கேட்டார்கள். ஆனால், வியாபாரம் ஆகவேண்டும் என்றால் இங்கு கவர்ச்சி தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. எனவே, தான் கவர்ச்சியை படத்திற்குள் கொண்டு வந்தேன்.
கண்டிப்பாக அரண்மனை 5 படத்தை இயக்கும் எண்ணமும் என்னிடம் இருக்கிறது. எனவே, அப்படி இயக்கினால் கண்டிப்பாக அந்த பாகத்திலும் கவர்ச்சி பாடல் இது போன்று இருக்கும் எனவும்” சுந்தர் சி தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அரண்மனை 5 படத்திற்காக நாங்கள் ஆவலுடன் காத்து இருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…