பிக் பாஸ் 7-வந்து சீசன் நிகழ்ச்சி அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர் . இதுவரை ஆறு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், ஏழாவது சீசன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
முதல் நாள் என்பதால் முதல் நாள் மட்டும் பிரமாண்டமாக ஆரம்பித்து பல மணி நேரங்கள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது . இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் குறித்த தகவலும் பரவி வருகிறது.
அந்த வகையில், தற்போது இந்த முறை பிக் பாஸ் 7 சீசன் தமிழ் நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பட வாய்ப்புகள் இல்லாமல் எல்லா படங்களையும் திரையரங்குகளில் சென்று பார்த்துவிட்டு தன்னுடைய வசனத்தை வைத்து படங்களை சமீப காலமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்.
கடைசியாக மன்சூர் அலிகான் நடித்த சரக்கு படத்தின் ப்ரோமோஷன் விழாவில் தொகுப்பாளினி கழுத்தில் மாலை போட்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். பிறகு வீடியோ ஒன்றை வெளியீட்டு தான் விளையாட்டாக இதனை செய்தததாகவும் அதற்கு மன்னிப்புக்கேட்டு கொள்கிறேன் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் நான் வறுமையில் இருக்கிறேன் என்பது போல பேசி வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.
அவர் உதவி கேட்டது நடிகர்களுக்கு கேட்டதோ இல்லையோ விஜய் தொலைக்காட்சிக்கு கேட்டுவிட்டது என்றே கூறலாம். இதன் காரணமாக அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கலகலப்பாக பேசி மக்களை சிரிக்க வைத்து வரும் கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…