கொரியாவின் பிரபலமான பாடகர்களான ஜின், ஆர்.எம்., ஜுங்கூக், ஜே-ஹோப், சுகா, வி, ஜிமின் ஆகியோர் பிடிஎஸ் என்ற பெயரில் இசை குழு தொடங்கி அதன் மூலம் பாடல்களை வெளியீட்டு வருகிறார்கள். இவருக்கு தமிழ்நாட்டில் கூட ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருக்கிறது என்றே சொல்லலாம். இவர்களின் பாடல் பெரும்பாலும் இளம் வயதினரை கவரும் வகையில் இருப்பதால் இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
இவர்கள் எழுதி இசையமைத்து பாடும் பாடல்கள் இலக்கியம் மற்றும் உளவியல் கருத்துக்கள் கொண்ட பாடலாக இருக்கும். ‘2 கூல் 4 ஸ்கூல்’ என்ற பாடலை தயார் செய்ததன் மூலம் இவர்களுடைய குழு அறிமுகமானது. அதனை தொடர்ந்து அவர்கள் பாடும் எல்லா பாடலும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆகி வருகிறது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், தற்போது ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், பிடிஎஸ் இசைக்குழுவின் பலருடைய பேவரைட்டாக இருக்கும் சுகா குழுவை விட்டு விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இராணுவத்தில் சேருவதற்கு சுகா செல்கிறாராம். அவர் தொடர்ச்சியாக பாடல்களை பாடி வந்தால் அவரால் ராணுவத்தில் சேர முடியாது என்ற காரணத்தால் பிடிஎஸ் இசைக்குழுவில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த ஆண்டே சுகா ராணுவ பணியில் சேரும் வேலைகளை தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி அவர் தன்னுடைய ராணுவ பணிக்காக செல்கிறாராம். இதனால் தற்காலிகமாக பிடிஎஸ் இசைகுழுவை விட்டு அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவப் பணிக்கு முன்னதாக நேரலையில் ரசிகர்களுக்கு ஆதரவையும் சுகா தெரிவித்தார். அதில் ” நான் இல்லாத நேரத்தில் யாரும் கவலைப்படவேண்டாம் அழக்கூடாது. நான் இல்லாத நேரங்களில் உங்களுக்கு பொழுது போகவேண்டும் என்றால் எங்களுடைய நிகழ்ச்சியான சுச்விதாவை பார்த்து ரசிங்கள்” எனவும் சுகா தெரிவித்துள்ளார். 2025 இல் தனது இராணுவ சேவையை முடித்த பிறகு சுகா மீண்டும் பிடிஎஸ் இசை குழுவுடன் சேர அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…