Breaking News:நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த உத்தரவு

Default Image

நடிகர் சங்கம் தேர்தல் நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது தென்சேன்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது..நாசர் தலைமையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்த பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறது.இந்த அணியை எதிர்த்து இயக்குநர் பாக்கிராஜ் தலைமையில் ஐசரி கணேஷ் ,உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவை நடைபெற்று முடிந்துள்ளது.
இதனையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக காவல்துறை கல்லூரிக்கு அளித்துள்ள விளக்கத்தில்,கல்லூரி உள்ள இடத்தில் முக்கியமான பிரமுகர்கள் பயணம் செய்யும் பாதையாக உள்ளது.குறிப்பாக நீதிபதிகள்,முதலமைச்சர்,அமைச்சர்கள் இந்த பாதை வழியே செல்கின்றனர் .எனவே இந்த கல்லூரியில் தேர்தல் நடத்தினால் பாதுகாப்பு அளிக்க சிரமம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.மேலும் தேர்தல் அன்று 8000-க்கும் அதிகமானோர் கூட உள்ளதால் பாதுக்காப்பு வழங்க முடியாது என்று தெரிவித்தது.
எனவே நடிகர் விஷால் இந்த கடிதத்தை சுட்டிக்காட்டி, தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என விஷால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று  விசாரணைக்கு வந்தது.
ஆனால் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்தினால், மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் இருக்கும் என்பதால், நடிகர் சங்க தேர்தலை இக்கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், நடிகர் சங்க தேர்தலை, இடையூறு இல்லாத வேறு இடத்தில் நடத்துமாறும், வேறு இடம் குறித்து இன்று  தெரிவிக்குமாறு நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது நடிகர் சங்கம் தேர்தல் நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது தென்சேன்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்