Breaking news: நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா மரணம் ….!அதிர்ச்சியில் தெலுங்கு திரை உலகம் …!
தெலங்கானா நல்கொண்டாவில் கார் விபத்தில் படுகாயமடைந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நந்தமுரி கிருஷ்ணா ஆந்திர முன்னாள் முதலமைச்சரும்,பிரபல நடிகருமான என்.டி.ராமாராவின் மகன் ஆவார். நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜூனியர் என்.டி.ஆர்.இவரது மகனும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ஆவார்.
தெலங்கானா நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி – அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் கார் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் படுகாயமடைந்தார்.பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படடார்.பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனால் தெலுங்கு சினிமா சோகத்தில் ஆழ்ந்துள்ளது.மேலும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஹரிகிருஷ்ணா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
DINASUVADU