BREAKING NEWS:காலா படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
காலா படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுரேந்தர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களிடையே காலா படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்த ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் பேச்சு காலா படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியது.
கன்னட ரகபஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி கருத்து:
முன்னதாக கன்னட ரகபஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி கருத்து கூறியுள்ளார். மன்னிப்பே கேட்டாலும் காலா படத்தை வெளியிட மாட்டோம் என்று கன்னட ரகபஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி தெரிவித்துள்ளார். படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்.காலா மட்டுமல்லாமல், ரஜினியின் எந்த படத்தையும் இனி வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரகபஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி தெரிவித்தார்.
மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட்வர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் சமூக விரோதிகள் தான் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தொடர் சர்சையால் காலா படத்தின் வெளியீடு என்னவாகும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.