கர்நாடகாவில் காலா படம் வெளியிடுவதற்கு அம்மாநில வர்த்தகச் சபை தடைவிதித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களிடையே காலா படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்த ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் பேச்சு காலா படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியது. இதையடுத்து ஜூன் 7ம் தேதி காலா படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது கர்நாடகாவில் காலா படம் வெளியிடுவதற்கு அம்மாநில வர்த்தகச் சபை தடைவிதித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…