#BREAKING : நடிகை சித்ரா மரண வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

chennai high court

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வந்தது.  பிறகு கடந்த மாதம் ஜாமினில் ஹேம்நாத்  வெளியேவந்தார்.

மேலும் , இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   நீண்ட நாட்களாக சித்ராவின் தற்கொலை வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் விரைவாக வழக்கை முடிக்கவேண்டும் எனவும்,  விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துவருவதாகவும் சித்ராவின் தந்தை வழக்கை சென்னைக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.

மாற்றப்பட்ட அந்த வழக்கை விரைவாக விசாரிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், காவல்துறை தரப்பில் இன்னும் 64 சாட்சிகள் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான காரணங்களுக்காக தான் வழக்கை முடிக்க தாமதமாகிறது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில்  சித்ராவின் தற்கொலை வழக்கு இன்னும் 6 மாதங்களில் முடிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறந்துள்ளது. வழக்கை சென்னைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை நிகாரித்து இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO
IRE vs IAND