#BREAKING: படப்பிடிப்பில் விபத்து… நடிகர் அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு முறிவு.!

Default Image

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தற்போது பிரபாஸ் நடித்து வரும் ‘ப்ராஜெக்ட் கே’  படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு  ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு ஆக்ஷன் காட்சியின் போது, அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது.

Amitabh Bachchan
Amitabh Bachchan [Image Source : Google ]

படப்பிடிப்பு தளத்தில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அமிதாப் பச்சன் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிடி ஸ்கேன் செய்துவிட்டு விமானம் மூலம் வீடு திரும்பினார். மேலும் காயத்திலிருந்து குணமடைய வாரங்கள் ஆகும் என்பதால் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

Amitabh Bachchan
Amitabh Bachchan [Image Source : Google ]

காயம் குணமடைய குறைந்தது சில வாரங்கள் ஆகும் என்பதால் அவருக்கு ஓய்வு அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  அமிதாப் பச்சன் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது காயமடைவது இது முதல் முறையல்ல. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜூலை 26, 1982 அன்று ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பின் போது பலத்த காயம் அடைந்தார். அப்போது, அடிவயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்