#Breaking : சற்றுமுன் நிகழ்ந்த சோகம்.! குஷ்பூ அண்ணன் திடீர் மரணம்.!

Default Image

80, மற்றும் 90 களில், முன்னணி நடிகையாக கலக்கிய நடிகை குஷ்பூ இப்போதும்  தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு படங்களை தயாரித்துக்கொண்டும் வருகிறார். அதுமட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உருக்கமான பதிவு ஒன்றை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டிருந்தார்.

அது என்னவென்றால், தனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருவதாகவும், கடந்த 4 நாட்களாகவே அவர் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும்  தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” எனவும் பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்களேன்- 2022 டாப் ட்ரெண்டிங் இது தான்… ஆடாத கால்களையும் ஆட்டம் போட வைத்த அட்டகாச ஹிட் லிஸ்ட்..!

இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த குஷ்பூவின் சகோதரர் பைஜான் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து, எனது சகோதரர் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என குஷ்பு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் குஷ்பூ கூறியிருப்பதாவது” உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரம் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் நமக்கு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்