#BREAKING: 69வது தேசிய திரைப்பட விருதுகள்;சிறந்த தமிழ் திரைப்படம் ‘கடைசி விவசாயி!
சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பலரையும் பாராட்ட செய்தது.
படத்தில் விவசாயி நல்லாண்டியுடன், விஜய் சேதுபதி, யோகி பாபு, முனீஸ்வரன் ஆகியோருடன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், பலரும் படக்குழுவினருக்கு இயக்குனர் மணிகண்டனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Best Tamil Film #KadaisiVivasayi
#69thNationalFilmAwards pic.twitter.com/K8oa2lRj1c
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 24, 2023