தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, அந்த ஆலையை சுற்றி உள்ள கிராம மக்களின் போராட்டம் கடந்த மாதம் மே 22 ஆம் தேதி 100வது நாளை எட்டியது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரகணக்கான கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
144 தடை உத்தரவையும் மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடத்தி, இறுதியில், துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இந்த தாக்குதலில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூற பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் தூத்துக்குடிக்கு சென்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், நடிகர் ரஜினி, விஜய் ஆகியோர் தூத்துக்குடி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தூத்துக்குடி மக்களை சந்திக்க உள்ளார். அங்கு சென்று துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்களின் வீட்டுற்கு சென்று ஆறுதல் கூறுவார். மேலும் மருத்துவமனைக்கு சென்று படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…