நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான “யசோதா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
விமர்சன ரீதியாக ஒரு பக்கம் படம் வெற்றியடைந்துவரும் நிலையில், வசூல் ரீதியாக மற்றோரு பக்கம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில், வெளியான 3 நாட்களில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்களேன்- அந்த விஷயத்துக்கு இப்போ வரைக்கும் “NO” சொல்ல முடியல… மனம் வருத்தப்பட்ட ஷகீலா.!
அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 20 கோடிகள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வெளியான 3 நாளில் 20 கோடிகள் வசூலை குவித்துள்ளதால், சமந்தா ரசிகர்கள் அவரை ‘பாக்ஸ் ஆபிஸ் குயின்’ என கூறி வருகிறார்கள்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…