பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி… 3 நாளில் ‘100’ கோடி வசூலை அள்ளிய வாரிசு..?
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. தில் ராஜு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
குடும்ப செண்டிமெண்ட் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் பலரும் டிவிட்டரில் #VarisuHits100Cr என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த தகவல் உண்மை என்றால் பட தயாரிப்பு நிறுவனமே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது.
தமிழக்தில் மட்டும் படம் 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது . நாளை பொங்கல் பண்டிகை, அதனை தொடர்ந்து தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.