மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சுவாரியர் தமிழில் சமீபத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது என்றே கூறலாம். மஞ்சு வாரியர் நடித்த கண்மணி கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டது.
இதற்கிடையில், மஞ்சு வாரியர் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி கேரளாவின் எர்ணாக்குளம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் காட்டி லைசென்ஸ் வாங்கிக்கொண்டு பைக் ஒட்டிய புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
அதனை தொடர்ந்து, தற்போது மஞ்சு வாரியர் புதிதாக BMW பைக் ஒன்றை வாங்கியுள்ளார். பைக் ஷோரூம் சென்று பைக்கில் செம மாஸாக அமர்ந்து கொண்டு வீடியோவை வெளியிட்டுள்ள மஞ்சு வாரியர் நடிகர் அஜித்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது ” என்னை போன்ற பலருக்கு முன்னுதாரணமாக இருப்பதற்கு நன்றி அஜித் சார் . தைரியத்திற்கான ஒரு சிறிய படி எப்போதும் சிறந்தது; நல்ல ரெய்டர் ஆவதற்கு முன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதனால், நான் சாலையில் தடுமாறுவதை நீங்கள் பார்த்தால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் புதிய பைக் வாங்கிய மஞ்சு வாரியருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…