பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய வாக்கு வாதமே 45-வது நாளான இன்று நடைபெற்றுள்ளது. வேறு யாருக்கும் இல்லை தினேஷ் மற்றும் விஸ்ணுவுக்கு தான். இவர்கள் இருவரும் கடும் வாக்கு வாதத்தில் சண்டைபோட்டுள்ள ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவை பார்க்கும்போதே இன்றயை எபிசோடின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தலைவராக தினேஷ் தான் இருக்கிறார். எனவே, அவர் விஸ்ணுவிடம் ப்ரோமோவில் வருவதற்காக வித்தியாசமாக தினமும் எதோ செய்து கொண்டு இருக்கிறாய். நீ ஒரு ப்ரோமோ பொறுக்கி என்று கூறுகிறார். இதனால் கடுப்பான விஸ்ணு தேவை இல்லாமல் என்னை பொறுக்கி எல்லாம் சொல்லாத அதற்கு எந்த தகுதியும் உனக்கு இல்லை.
என்னை எப்படி நீ பொறுக்கி என்று சொல்லலாம் என்று விஸ்ணு கேட்க அதற்கு தினேஷ் ஆமா நீ பொறுக்கி தான் என கூறுகிறார். இதனால் மிகவும் கோபம் அடைந்த விஸ்ணு அமரும் இருக்கையை காலால் எட்டி உதைத்துவிட்டு இனிமேல் என்னை அப்படி சொன்னால் உனக்கும் இதே கதி தான் என்பது போல தினேஷை எச்சரிக்கவும் செய்தார்.
சம்பந்தமே இல்லாதவன் பைனல்ல இருப்பான்! பிக் பாஸ் ஐ கடுமையாக விமர்சித்த பூர்ணிமா!
ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் அடிபிடி சண்டை வருவது போல இருவரும் கோபப்பட்டனர். இதனால் சக போட்டியாளர்கள் உள் இறங்கி சண்டையை நிறுத்தி வைக்க இருவரையும் தனி தனியாக பிரித்து சென்றார்கள். இருந்தாலும் விஸ்ணு உன்னை பற்றி எல்லாம் தெரியும் எனக்கு.. என கூற அதற்கு உனக்கு என்ன தெரியும்? என சண்டைக்கு தினேசும் சென்றார்.
இந்த ப்ரோமோ பெரிய அளவில் வைரலாகி வந்து கொண்டிருக்கும் நிலையில், தினேஷ் தனது உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார்.. இனிமேல் வேற லெவலில் ஆட்டம் இருக்கும்.. என கூறி வருகிறார்கள். மேலும், இவர்களுக்குள் என்ன காரணத்துக்காக சண்டை வந்தது என்பது இன்றயை எபிசோடில் தான் தெரிய வரும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…