இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் இயக்குநர் மணிரத்னம் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா, ஆகிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மணிரத்னம் ” ஆர்.ஆர்.ஆர் திரைபடம் ஆஸ்கார் விருது வென்றது பெருமையான விசயம் தான். பொன்னியின் செல்வன் படத்தை ஆஸ்கார் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. மக்களிடம் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்.
பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து, இனி வரும் காலங்களில் பொன்னியின் செல்வன் படத்தை போன்று வரலாற்று படங்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது என நான் நம்புகிறேன். கல்கியின் நாவலை திரையில் காட்டவில்லை கல்கி என்ன எழுதினாரோ அதை வைத்து தான் படம் எடுத்துள்ளேன்” என கூறியுள்ளார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…