போனி கபூருக்கு சொந்தமான ரூ. 39 லட்சம் மதிப்புள்ள 66 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்.!
உரிய ஆவணங்கள் இன்றி போனி கபூருக்கு சொந்தமான வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்.
பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமான ரூ.39 லட்சம் மதிப்புள்ள 66 கிலோ வெள்ளி பொருட்களை, கர்நாடகா மாநிலம் தாவாங்கேரே புறநகர் பகுதியில் உள்ள ஹெப்பாலு சுங்கச்சாவடி அருகே உள்ள சோதனைச்சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவந்த போலீசார் பறிமுதல் செய்தது.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார், போனி கபூருக்கு சொந்தமான வெள்ளி பொருட்களை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பறிமுதல் செயற்பட்ட வெள்ளிப் பொருட்களில் கிண்ணங்கள், கரண்டிகள், தண்ணீர் குவளைகள் மற்றும் தட்டுகள் இருந்தன. இதையடுத்து, டிரைவர் சுல்தான் கானுடன் காரில் இருந்த ஹரி மீது தாவணங்கேரே ஊரக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.