நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள ‘ஆர்ச்சிஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் குஷி கபூர், கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த தென்னிந்திய நடிகையான ஸ்ரீதேவி மற்றும் தயரிப்பாளரான போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகாவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஆனால், தமிழ் சினிமாவில் எப்படியாவது அறிமுகம் ஆக வேண்டும் என தவமாக காத்திருக்கும் நிலையில், அடிக்கடி ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருடன் அல்லது இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தாலும், அதனை அவரது தந்தை போனி கபூர் முற்றிலும் பொய் என்று கூறி அந்த வதந்திகளை முறியடித்து விடுவார்.
ஆனால், தற்பொழுது அக்காவுக்கு முன்னாடியே தங்கை குஷி கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிவிடுவார் போலயே. ஒரு தகவலின் படி, நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக தான் நடிக்க உள்ளாராம்.
அட ஆமாங்க… விக்னேஷ் சிவனின் படங்களில் உதவிய ஆகாஷ் இந்த திட்டத்தை இயக்குகிறார் என்றும், இப்படத்திற்கான பூஜை நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. லைகா தயாரிக்கும் இந்த திரைப்படம் வித்தியாசமான கதைகளத்தை வைத்து உருவாக்கப்பட்டு வருகிறதாம்.
அதர்வா நடிக்கும் பிரமாண்ட புது படம்! இயக்குனர் யார் தெரியுமா?
அதர்வா நடிக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக குஷி கபூரை தான் நடிக்கவைக்க படக்குழு முடிவு செய்து இருக்கிறதாம். இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த விவரங்களும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் வரும் நாட்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…