மைதான் படத்துக்கு அமோக வரவேற்பு! போனிகபூர் மகிழ்ச்சி!

Published by
பால முருகன்

Maidaan : மைதான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், போனிகபூர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

தயாரிப்பாளர் போனிகபூர் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜய் தேவ்கனை வைத்து மைதான் என்கிற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை அமித் ரவீந்தர்நாத் சர்மா என்பவர் எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்தில் நிதான்ஷி கோயல், அபினய் ராஜ் சிங், கஜராஜ் ராவ், ருத்ரனில் கோஷ், ஜானி லீவர், ஷாரிக் கான் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் இந்திய அணியை எவ்வாறு பயிற்சி செய்து கவனித்து கொண்டார் என்பதனை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியானது.

ஏற்கனவே, படத்தின் டீசர், ட்ரைலர் என வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்த நிலையில், படமும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாக படத்திற்கு நல்ல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது. அதனை தொடர்ந்து இதுவரை 2 நாட்களில் மொத்தமாக படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவலும் கிடைத்து இருக்கிறது. ஆனால், படம் வெளியான இரண்டாவது நாளில் குறைவான வசூலை ஈட்டியுள்ளது. அதாவது 3 கோடி வரை மட்டும் தான் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் படம் வெளியான நாளில் இருந்து மொத்தமாக இதுவரை உலகம் முழுவதும் 13 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாலும், வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பு கிடைத்து வருவதால் தயாரிப்பாளர் போனிகபூர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

Recent Posts

காஷ்மீர் சுரங்கப்பாதை : கடந்த வருடம் தீவிரவாத தாக்குதல்.. இந்த வருடம் பிரதமர் மோடி திறந்து வைப்பு!

காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…

13 seconds ago

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை அன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…

36 minutes ago

பொங்கல் 2025 : ஜல்லிக்கட்டுக்கு ரெடியான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு…

மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…

39 minutes ago

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விநியோக மையத்தில் தீ விபத்து!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…

1 hour ago

அணையாமல் எரியும் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ… பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…

2 hours ago

மகரஜோதி தரிசனத்தை எங்கிருந்து காணலாம்? சபரிமலையில் ஏற்பாடுகள் தீவிரம்!

திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி  திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…

3 hours ago