வயசாச்சு இப்படியா பண்ணுவீங்க! போனிகபூர் செயலால் முகம் சுளித்த ரசிகர்கள்!

Boney Kapoor : பிரியாமணியுடன் போஸ் கொடுக்கும்போது போனிகபூர் செய்த செயல் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்தியத் திரையுலகின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான போனி கபூர் தற்போது பல படங்களை தயாரித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், அவர் அடுத்ததாக அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்துள்ள மைதான் படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10 -ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக படத்தின் சிறப்பு காட்சிகளை பிரபலங்கள் பார்ப்பதற்காக போனிகபூர் மும்பையில் ஏற்பாடு செய்தார். அதில் பிரியாமணி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
அப்போது பிரியாமணியுடன் போனிகபூர் போஸ் கொடுக்கும் போது செய்த விஷயம் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. விழாவின் போது பிரியாமணி போஸ் கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது போனி கபூர் கையை வைத்து பிரியாமணி மீது கைபோட்டார். அதாவது பிரியாமணி இடுப்பில் கை வைத்து போஸ் கொடுத்தார்.
பிறகு முதுகிலும் கைபோட்டு போஸ் கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்ற நிலையில். அதனை பார்த்த ஒரு சில நெட்டிசன்கள் இந்த வயசுல இப்படியா பண்ணுவீங்க என்று கலாய்த்தும் ஒரு சிலர் அவர் சாதாரணமாக அப்படி போஸ் கொடுத்திருப்பார் அதனை ஏன் சர்ச்சையாக மாற்றுகிறீர்கள்? எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Priyamani with Boney Kapoor at the #Maidaan screening.#Priyamani #BoneyKapoor #Maidaan #AjayDevgn pic.twitter.com/OuqqMiloTa
— FilmyPond (@FilmyPond) April 9, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025