ஜான்வி கபூர் தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என அவருடைய தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் விளக்கம் கொடுத்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர் சமீபகாலமாக உடல் எடையை குறைத்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியீட்டு வருகிறார். இதனை பார்த்த பலரும் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு தான் உடல் எடையை குறைத்து வருகிறார் என்று கூறினார்கள். அதைப்போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான்வி கபூர் தமிழில் பையா 2 படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார் என தகவல்கள் பரவியது.
அது மட்டுமின்றி, தனுஷிற்கு ஜோடியாகவும் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக வதந்தி தகவல் தீயாய் பரவியது. இது உண்மை தகவலா அல்லது வதந்தி தகவலை என ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்த நிலையில், தயாரிப்பாளரும், நடிகை ஜான்வி கபூரின் தந்தையுமான போனிகபூர் ட்வீட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது “அன்புள்ள ஊடக நண்பர்களே, பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஜான்வி கபூர் தற்போது எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்” என வதந்தி தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதைப்போல, தயாரிப்பாளர் போனிகபூர் லவ் டுடே படத்தின் ரீமேக்கை கைப்பற்றியுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வதந்தி தகவல் பரவியது. அதற்கும் போனிகபூர் தான் லவ்டுடே படத்தின் ரீமேக் உரிமையை வாங்கவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…