நடிகர் சூர்யாவை பார்த்து வியந்து போன பாலிவுட் பிரபலம்.!

suirya - kanguva - Bobby Deol

பாலிவுட் நடிகர் பாபி தியோல் தற்போது ‘அனிமல்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியில் மூழ்கியுள்ளார். ரன்பீர் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அப்ரார் ஹக் என்ற முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இப்போது கங்குவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

சூர்யா நடிக்கும் படத்தில் தனது பங்கு குறித்து மனம் திறந்து பேசினார்.  சமீபத்தில் ஒரு முன்னணி ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த பாபி தியோல், தற்போது சூர்யாவுடன் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

இது ஒரு அற்புதமான படக்குழு, நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவாவை வெகுவாக பாராட்டிய பாபி தியோல் “சூர்யா ஒரு அற்புதமான நடிகர் மற்றும் மிகவும் அர்ப்பணிப்புள்ளவர். அவருடன் பணிபுரிவது உண்மையான மகிழ்ச்சி,” இப்படத்தில் நான் நடிக்கும் கேரக்டர், என்னுடைய வழக்கமான கேரக்டர்களில் இருந்து வேறு விதமாக இருக்கும்.

தமிழ் தெரியாமல் இப்படத்தில் நடித்தது மாறுபட்ட அனுபவமாக இருந்தது. என்னால் ஓரிரண்டு மாதங்களில் தமிழ் கற்றுக் கொள்ள முடியவில்லை, என்று தெரிவித்த அவர், இயக்குனர் சிவா ஒரு “அன்பானவர்” என்றும் கூறினார். அனிமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாபி தியோல் சரியாக நடித்திருந்தார். அதேபோல் கங்குவா படத்திலும் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக சம்பளம் கேட்டு கங்குவா படத்தின் வாய்ப்பை இழந்த பாகுபலி நடிகர்?

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து  வரும் கங்குவா திரைப்படம் தான். இப்படத்தில் கோவை சரளா, ஜிஷு சென்குப்தா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்ரமணியம், ஆனந்த் ராஜ், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், தீபா வெங்கட் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்கள் மற்றும் அசல் இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கங்குவா ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்