பாகிஸ்தான் நடிகையுடன் முத்த காட்சி.. பாலிவுட் நடிகரின் விசாவை நிராகரித்த சம்பவம்.!

Ashmit Patel

அஷ்மித் படேல் : பாகிஸ்தான் நடிகை மீராவுடனான நெருக்கமான காட்சியில் நடித்ததற்காக பாகிஸ்தான் அரசாங்கம் தனது விசா விண்ணப்பத்தை நிராகரித்ததாக பாலிவுட் நடிகர் அஷ்மித் படேல் வெளிப்படுத்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அஷ்மித் படேல் மற்றும் பாகிஸ்தான் நடிகை மீரா நடித்த ‘நாசர்’ திரைப்படம் கடந்த 2005 ஆண்டு மே 20ம் தேதி அன்று வெளியானது. இந்த படம் கடந்த 20ம் தேதியுடன் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளது.

இப்போது, 19 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படத்தின் முதல் காட்சி பார்பதற்காக பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் தனக்கு விசா வழங்கப்படவில்லை என்று அஷ்மித் படேல் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

அது ஏன் என பாலிவுட் தனியார் சேனலிடம் விவரித்த நடிகர் அஷ்மித் படேல், “பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் நடந்த காரா திரைப்பட விழாவில், இந்தப் படம் திரையிடப்பட்டிருந்தது. அந்த படத்தின் டைட்டில் பாடலில் எனக்கும் மீராவுக்கும் இடையே ஒரு முத்தம் இருந்தது, இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், படத்தின் வெளியீட்டின் போது, ​​பாகிஸ்தானில் பிரீமியர் நடத்தப்பட்டது. பிரீமியர் ஷோவிற்கு, செல்வதற்கு விண்ணப்பித்த விசாவை பாகிஸ்தான் அரசாங்கம் நிராகரித்ததாக கூறினார். விண்ணப்பத்தை நிராகரித்ததைத் தவிர வேறு எதுவும் வெளிவரவில்லை. என்னைத் தவிர படத்தின் குழுவில் இருந்து அனைவரும் சென்றனர்” என்று கூறினார்.

இந்த படத்தை சோனி ரஸ்தான் இயக்கியிருந்தார், அனு மாலிக் இசையமைக்க படத்தை மகேஷ் பட் தயாரித்துள்ளார். படத்தின் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இப்படத்தில் அஷ்மித் தவிர கோயல் பூரி மற்றும் நீனா குப்தா போன்ற நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
CSK vs RCB RCB
bumrah MI
Sardar2
Nitish Kumar woman at event sparks row
tamilisai soundararajan about tvk vijay
virender sehwag ms dhoni