அமெரிக்க தூதருக்கு தன் வீட்டில் விருந்தளித்த ஷாருக்கான்.!பாலிவுட்டில் அறிமுகமாகும் எரிக் கார்செட்டி.?

Shah Rukh Khan and Eric Garcetti

அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டிக்கு மும்பையில் உள்ள தன் வீட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விருந்தளித்துள்ளார். 

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அண்மையில், அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டிக்கு மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு நேரில் அழைத்து விருந்தளித்தார். அமெரிக்க தூதர் கார்செட்டி தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

இந்த சந்திப்பை, கார்செட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திரைப்படத் துறை மற்றும் உலகம் முழுவதும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவின் தாக்கம் குறித்தும் ஷாருக்கான் உடன் உரையாடியதாகவும் அதில் காரஷெட்டி குறிப்பிட்டு இருந்தார். மேலும், அமெரிக்க தூதர் பாலிவுட்டில் அறிமுகம் ஆக போவதாகவும் கிண்டலாக அதில் பதிவிட்டு இருந்தார்.

ஷாரூக்கான் நடிப்பில் கடையாக வெளியான பதான் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து தமிழ்ப்பட இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் செப்டம்பர் 7இல் திரைக்கு வரவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்