மூத்த பாலிவுட் நடிகர் சதீஷ் கௌசிக், தனது 67 வயதில் காலமானார்.
மூத்த பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் சதீஷ் கௌசிக், தனது 67 வயதில் காலமானார், அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இதனை கௌஷிக்கின் நண்பரும் எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் தந்தையாக நடித்தவருமான அனுபம் கேர் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அனுபம் கேர் தனது ட்விட்டரில், இறப்பு என்பது இந்த உலகின் இறுதி உண்மை! ஆனால் நான் என் சிறந்த நண்பர், சதீஷ் கௌஷிக் பற்றி இந்த விஷயத்தை எழுதுவேன் என்று நான் என் கனவில் கூட நினைத்ததில்லை. 45 வருட நட்பின் திடீர் முற்றுப்புள்ளி. சதீஷ், நீ இல்லாமல் வாழ்க்கை இனி ஒரே மாதிரியாக இருக்காது! ஓம் சாந்தி! என்று பதிவிட்டுள்ளார்.
ஏப்ரல் 13, 1956 இல் பிறந்த சதீஷ் சந்திர கவுசிக், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்ட அவர் ராம் லக்கன், சாஜன் சாலே சசுரல், ஜானே பி தோ யாரோ போன்ற படங்களில் நடித்துள்ளார் மற்றும் ரூப் கி ராணி சோரோன் கா ராஜா, ஹம் ஆப்கே தில் மே ரெஹ்தே ஹைன், தேரே நாம், கியோன் கி, மேலும் சமீபத்தில் பங்கஜ் திரிபாதியுடன் காகஸ் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…