Vijayakanth : அடக்கம் செய்ய கூட காசு இல்லை! பணமின்றி தவித்த நடிகையின் மகளுக்கு கேப்டன் செய்த பெரிய உதவி!

captain Vijayakanth

நடிகர் விஜயகாந்த் சாப்பாடு முதல் பண உதவி வரை யாரு கேட்டாலும் இல்லையென்று சொல்லவே மாட்டார். அவர் செய்த உதவிகளை பற்றி அவருடன் இருந்தவர்கள் பேட்டிகளில் தெரிவித்து நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், யாருக்கும் தெரியாமல் கூட கேப்டன் விஜயகாந்த்  பல உதவிகளை அதில் ஒன்று தான் தேனி குஞ்சரம்மாள் இறப்பின் அடக்கத்திற்கு பணம் அனுப்பியது. இந்த தகவல் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

விஜயகாந்த் செய்த இந்த உதவி பற்றிய தகவலை பிரபல நடிகரும் விஜயகாந்திற்கு நெருக்கமானவருமான மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஒரு முறை விஜயகாந்த் எனக்கு காலையிலேயே ஒரு 8 மணிக்கு போன் செய்து இன்று படப்பிடிப்பு இருக்கிறதா? என்று கேட்டார்.

அதற்கு நான் இல்லை கேப்டன் இன்று படப்பிடிப்பு இல்லை என்று கூறிவிட்டேன். பிறகு தேனி குஞ்சரம்மாள் உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார் நான் அதற்கு தெரியும் கேப்டன் என்று கூறினேன். பிறகு ஒரு பை நிறைய 100 ரூபாய் நோட்டுகள் கொண்ட கிட்டத்தட்ட 10-ஆயிரம் ரூபாவை எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் எதற்கு கேப்டன் இவ்வளவு பணம்? என்று கேட்டேன்.

அதற்கு கேப்டன் தேனி குஞ்சரம்மாள் இறந்துவிட்டார் அவருடைய மகள் சாந்தி என்பவர் அடக்கம் எடுக்க கூட என்னிடம் பணம் இல்லை உதவி செய்யுங்கள் என்று கேட்டிருந்தார். நீ உடனடியாக இந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கு சென்று சாந்தி யார் என்று கேட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் இந்த பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு இரங்கலை தெரிவித்துவிட்டு வந்துவிடு என்று கூறினார்.

குறிப்பாக இந்த உதவியை செய்தது வெளியில் யாருக்கும் தெரியவே கூடாது அதனை கவனமாக பார்த்துக்கொள் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி பணத்தை தேனி குஞ்சரம்மாள் மகள் சாந்தியிடம் கொடுக்கும்போது வேறு எதுவும் உதவி வேண்டுமென்றால் என்னிடம் கேட்க சொல்லு என்றும் கூறி அனுப்பினார். கேப்டன் கூறியதில் மிகவும் ஆச்சரியமாக நான் பார்த்தது உதவி செய்தது வெளியே தெரியவேண்டாம் என்றது தான்.

கேப்டன் அப்படி கூறியவுடன் அந்த மாதிரி ஒரு மனிதரை நான் சினிமாவிலும் பார்க்கவில்லை, அரசியலிலும் பார்க்கவில்லை” எனவும் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் ஈடு இணை இல்லா தலைவர் எனவும், வாழும் கடவுள் கேப்டன் எனவும் விஜயகாந்தை புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்