இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ்விக்ரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மகான். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது அதன் பிறகு சில காரணங்களால் படம் நேரடியாக அமேசான் ஓடிடி இணையதளத்தில் வெளியானது .
ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய பாராட்டை பெற்றது படம் பார்த்த பலருமே படம் அருமையாக இருப்பதாகவும் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என்றும் பாராட்டி இருந்தனர். படத்தில் விக்ரம் துருவிக்ரம் கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே அளவிற்கு பாபிசிம்ஹா நடித்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பாபி சிம்ஹா நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். பிறகு இயக்குனர் ஷங்கர் சொன்ன காரணத்தால் தான் படத்தில் நடிக்கவே சம்மதம் தெரிவித்தாராம். இந்த தகவலை நடிகர் பாபி சிம்ஹாவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” மகான் படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் இந்தியன் 2 படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தேன்.
அன்னபூரணி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?
எனவே, மகான் படத்தில் நான் நடிக்க முதலில் தயாராக இல்லை ஏனென்றால், படத்தில் வயதான தோற்றம் முதல் இளமையான தோற்றம் வரை இரண்டு கெட்டப்களில் நடிக்கவேண்டும். எனவே, அந்த சமயம் நான் இந்தியன் 2 படத்திற்காக கெட்டப் வைத்து இருந்தேன். எனவே மகான் படத்தில் நடிக்க நான் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து கொண்டே இருந்தேன்.
பிறகு கமல்ஹாசன் சார் இடையில் விக்ரம் படத்தில் நடிப்பதற்காக சென்றார் எனவே, அந்த சமயத்திற்குள் நான் மகான் படத்தில் நடிக்கலாம் என்று திட்டமிட்டு ஷங்கர் சார் கிட்ட அனுமதி கேட்டேன். அதற்கு ஷங்கர் சார் எதுவும் சொல்லாமல் அதுக்கு என்ன நீங்க நடிச்சிட்டு வாங்க என்று கூறினார். ஷங்கர் சார் சொன்ன காரணத்தால் தான் மகான் படத்தில் நடித்தேன்” எனவும் பாபி சிம்ஹா கூறியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…