சூர்யா 44 : நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 44-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை 2டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் பகுதியில் மும்மரமாக நடந்து வந்த நிலையில், தற்போது அங்கு நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு லோகேஷன் தேடி வருகிறது. வழக்கமாகவே கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்கினார் என்றால் அந்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா இருப்பார் என்பது அனைவர்க்கும் தெரியும்.
எனவே, கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை வைத்து சூர்யா 44 படத்தை இயக்கி வருவதால் பாபி சிம்ஹா இந்த படத்தில் இருக்கிறார் என பலரும் நினைத்தனர். ஆனால், பாபி சிம்ஹா சூர்யா 44 படத்தில் நடிக்கவில்லையாம். கார்த்திக் சுப்புராஜ் அவருக்கு கால் செய்து இந்த படத்தில் நீ நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
இந்த தகவலை சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது பாபி சிம்ஹா தெரிவித்தார். இது குறித்து பேசிய பாபி சிம்ஹா ” முதலில் படத்தில் நீ இருந்தால் நன்றாக இருக்கும் என்று கார்த்திக் சுப்புராஜ் எனக்கு கால் செய்து கூறினார்.
பிறகு நீ இந்த படத்தில் நடிக்கவேண்டாம் இந்தியன் 2 படத்தில் நீ நடித்திருக்கிறாய். உனக்கு இந்த படத்திற்கு பிறகு வேறு மாதிரியான படங்களில் நடிக்க வாய்ப்பு வரும். சூர்யா 44 படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நீ நடித்தால் சரியாக இருக்காது என்று கூறினார். கார்த்திக் சுப்புராஜ் இப்படி யோசித்த காரணத்தால் நானும் சரி இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். நான் சூர்யா 44 படத்தில் நடிக்கவில்லை” எனவும் பாபி சிம்ஹா கூறியுள்ளார். பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …